திங்கள், 10 அக்டோபர், 2016

பதவி ஆசையில் அங்கும் இங்கும் தேடி ஓடி அழைந்த முத்துராமலிங்கதேவர்

பதவி ஆசையில் அங்கும் இங்கும் தேடி ஓடி அழைந்த முத்துராமலிங்கதேவர்

1.1936ல் ஜில்லா போர்ட் தலைவராக வேண்டும் என்ற ஆசையில் முதுகுளத்தூர் சர்க்கிள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்,ஆனால் தனது தீவிர விசுவாசியான குமாரசாமி இராஜாவை ஜில்லா போர்ட் தலைவராக்கினார் மாநில செயலாளர் காமராஜர்.மாநில செயலாளரின் கட்டளையை மீற முடியாமல் வட்டாரதலைவர் முத்துராமலிங்கதேவர் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு வேறு வழியின்றி குமாரசாமி இராஜா ஜில்லா போர்ட் தலைவராக அவரது பெயரை தானே முன்மொழிந்தார்.

2. 1946ல்பாவர்ட்பிளாக் கட்சி மீது போடப்பட்ட தடையை வெள்ளைய அரசு நீக்கிய பிறகும்,நேதாஜியின் தீவிர விசுவாசியாக தன்னை காட்டிக்கொள்ளும் தேவர் பாவர்ட்பிளாக் கட்சியில் சேராமல்,காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் காமராஜரிடம் 1946 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூரில் போட்டியிட டிக்கெட் பெற்றார், மந்திரி பதவி கிடக்காத விரக்தியில் சட்டசபைக்கு செல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

3. காங்கிரஸில் மிகப்பெரிய சக்திகாளான மூதறிஞர் இராஜாஜி,மிகசிறந்த ஆர்கனைசரான காமராஜர் இவர்கள் இருக்கும் வரை நமது படம் ஓடாது என்பதை புரிந்து கொண்டு 1949ல் தமிழகத்தில் பாவர்ட்பிளாக் கட்சி தலைவரானார்.1952 தேர்தலில் பதவி ஆசையில் தேவர் இரண்டு எம் பி க்கும் ஒரு எம் எல் ஏ வுக்கும் போட்டியிட்டு அருப்புகோட்டை மக்களவை தொகுதியிலும்,முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றார்.ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் டெப்பாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.

4.1952ல் தமிழக சட்டசபை தொங்கு சட்டசபையாக அமைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க மற்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.தனது மூன்று எம் எல் ஏ க்களின் ஆதரவை கொடுத்து மந்திரி ஆகிவிடலாம் என்ற பகல் கனவில் தனது எம் பி பதவியை இராஜினாமா செய்துவிட்டு எம் எல் ஏ வாக தொடர்ந்தார் தேவர்.ஆனால் இவரை விட 6 மடங்கு மக்கள் செல்வாக்கு பெற்ற இராமசாமிபடையாட்சியாரின் 18 எம் எல் ஏ ஆதரவும்  இவரை விட மக்கள் செல்வாக்கு பெற்ற மாணிக்கநாயக்கரின் 7 எம் எல் ஏ ஆதரவும் மற்றும் பல சுயேட்சைகளின் ஆதரவும் மூதறிஞர் இராஜாஜியின் அமைச்சரவைக்கு கிடைத்ததால் தேவரையும் அவரது ஆதரவையும் மூதறிஞர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தேவரின் மந்திரி பதவி கனவு காலை கனவாகவே போனது.

5.குலகல்வி திட்டத்தால் ஏற்ப்பட்ட எதிர்ப்பின் காரணமாக பதவி இழந்தார் மூதறிஞர் இராஜாஜி.பிறகு 13-041954ல் காமராஜர் முதல்வரானார்.மூதறிஞர் இராஜாஜியால் தனக்கு கிடைக்காத மந்திரி பதவியை காமராஜரிடமாவது பெற்று விடலாம் என்ற கனவில், சேலம் வரதராஜுலு நாயுடு வீட்டில் ரகசியமாக சென்று தான் முதல்வர் காமராஜரை சந்தித்ததாக தேவர் பல முறை மேடைகளில் கூறிவுள்ளார்.தனது மந்திரி பதவி பேரம் படியாததால் தனது இமேஜை காப்பற்ற வேறு பல கதைகளை கூறிவுள்ளார்.

6.தனது பதவி ஆசை நிறைவேற வில்லையே எங்கின்ற விரக்தியில் புத்தி பேதலித்து 1957ல் பொது மேடைகளில் நான் 1936ல் மாநில செயளாளருக்கு ஆட்டுகுட்டி வாங்கி தந்தேன். 1954ல் தான் எந்த கட்சியில் இருக்கிறோம் என்பதை கூட மறந்து விட்டு அவரை முதல்வராக்கியதே நான் தான் என்று கூறுவது, ஜாதியை பற்றி பேசமாட்டேன் என்று கூறிவிட்டு தமிழக முதல்வரை சானபயல் என பேசுவது, (நாய் குறைப்பதற்க்கு நாம் கூட பதில் சொல்ல மாட்டோம் முதல்வர் எப்படி பதில் சொல்வார்)

7. தனித்து நின்றால் தனது படம் ஓடாது என்பதற்க்காக சுதந்திரா கட்சியிடன் 1962ல் கூட்டணி வைத்துக்கொண்டார் இதில் சிறப்பு என்ன தெரியுமா? தான் எப்படியாவது மந்திரி ஆக வேண்டும் என்பதற்க்காக தன்னை ஐந்து வருடம் மூதறிஞர் ராஜாஜி சிறையில் வைத்ததை மறந்து விட்டு மூதறிஞர் ராஜாஜியிடன் சரண்டர் ஆனார் முத்துராமலிங்கதேவர்.

இப்படி பல முயர்ச்சி செய்தும் தேவரின் பதவி ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை, தனது ஆட்டோ கட்சியின் 1.3% வாக்குகளையும் மூன்று எம் எல் ஏ களையும் இழக்காமல் இருந்தது மட்டும்தான் இவரது வாழ்நாள் சாதனை இந்த மறுக்க முடியாத உண்மைகளை திரு காவ்யாசண்முகசுந்தரம்,பேராசிரியர் செல்வராஜ்,பொக்கிசம் பூபதிராஜா,இடது சாரி தோழர் ஜீவபாரதி போன்ற தேவர் இன எழுத்தாளர்கள் புள்ளி விவரங்களுடன்,ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கமுடியுமா?

கண்ணியமாக எங்களுடன் ஆரோக்கியமான விவாதத்திற்க்கு உங்களை வருக வருக என வரவேற்கிறோம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக