வெள்ளி, 7 அக்டோபர், 2016

பேரூராட்சி,ஊராட்சிகளில் 20% குறைவாக எஸ்.சி வாக்குகள் உள்ள பகுதிகளை பட்டியல் பிரிவுக்கு மாற்றியதை இரத்து செய்து பொதுப்பிரிவினருக்கு மாற்றிடமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

பெறுனர்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள்
பொருள்:தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றாமல் மாநகராட்சி, ஊராட்சி தலைவர் பதவிகளை பட்டியல் பிரிவுக்கு மாற்றியதை இரத்து செய்யக்கோரி மனு.
ஜயா வணக்கம்
இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுபிரிவு ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி தலைவர் தேர்தலுக்கு பட்டியல் பிரிவுக்கு சுழற்சி முறையில் மாற்றிட 20% பட்டியல் பிரிவு வாக்காளர்கள் அந்த பகுதிகளில் இருக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆனையம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது எஸ்.சி.பிரிவுனருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிச்சிவிளை,தருவைகுளம்,பழங்குளம், நாலுமாவடி,வீரமாணிக்கம்,மேலப்புதுக்குடி,பள்ளிபத்து,தண்டபத்து,வரண்டியவேல்,நட்டாத்தி,செட்டியாபத்து போன்ற ஊராட்சிகளும்.
திருநெல்வேலி மாவட்த்தில் உள்ள ஆனைகுடி,கரைசுத்துபுதூர்,சவுந்திரபாண்டியபுரம்,கீழப்பாவூர்,காடன்குளம்திருமலாபுரம்,சடையநேரி,மாயமான்குறிச்சி,இடைக்கால்,அரியநாயகிபுரம் உள்ளிட்ட 20%க்கும் மேற்ப்பட்ட ஊராட்சிகளில் பொதுப்பிரிவில் இருந்து எஸ் சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள ஊராட்சிகளில் 10%கூட பட்டியல் பிரிவு வாக்குகள் இல்லை.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலிலும் இதே நிலை பின்பற்றப்பட்டு பொதுப்பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆனைய விதிமுறைகளை பின்பற்றி மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி,ஊராட்சிகளில் 20% குறைவாக எஸ்.சி வாக்குகள் உள்ள பகுதிகளை பட்டியல் பிரிவுக்கு மாற்றியதை இரத்து செய்து பொதுப்பிரிவினருக்கு மாற்றிடமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேஷ்நாடார்
தலைவர்
தமிழ்நாடு நாடார் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக