வெள்ளி, 14 அக்டோபர், 2016

காமராஜரின் பெயரை பயன்படுத்த நாடார்களுக்கு தகுதி இருக்கிறதா?

கல்விக்கண் திறந்த காமராஜரின் கண்கள் காணவில்லை
***********************************************************************************
நாட்டுக்காக உழைத்த உத்தமரின் சிலை கடந்த 5 வருடங்களாக உடைந்து பராமரிப்பு இன்றி காணப்படுகிறது, திருநெல்வேலி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் உள்ளது இந்த பெருந்தலைவரின் சிலை.

5 வருடங்களாக சிலை உடைந்து உள்ளது, அதற்கு என்ன முயற்சி எடுத்தார்கள் என்று ஆழ்வார்திருநகரில் இருக்கும் நமது சமுதாய மக்களிடம் கேட்கும் போது வணிகர் சங்கத்தில் இருந்து புது சிலை அமைக்கிறோம் என்று ஒரு தரப்பினரும்,நாடார் இயக்கம் புது சிலை அமைக்கிறோம் என்று ஒரு தரப்பினரும் கடந்த 5 வருடங்களாக சொல்லுகிறார்கள்.

மாபெரும் தலைவரின் சிலையை அரசும் கண்டு கொள்ளவில்லை, நமது சமுதாய தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. கல்விக்கு கண் கொடுத்த மகான் இல்லை என்றால் தமிழ்நாட்டில் இலவச கல்வி கிடைக்க மிக அரிது அப்படி பட்ட ஒரு மகானின் சிலை பராமரிப்பது நம்முடைய ஒவ்வொருவரின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக