புதன், 21 பிப்ரவரி, 2018

உலக தாய் மொழி தினம்

இன்று(21/02/2018) உலக தாய்மொழி தினம்.

தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என பல தியாகங்களையும்,சேவைகளையும், செய்த சமுதாயம் நாடார் சமுதாயம்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் காமராஜர் அவரது ஆட்சியில் தமிழ் ஆட்சி மொழியாகவும்,தமிழ் கலைச்சொல் அகராதியும்,தமிழ்நாடு பாடநூல்கழகமும் தோற்றி வைக்கப்பட்டது.

கருணாகர சாகரம் எனும் இசை நூலை எழுதிய தமிழ் இசையின் தந்தை ஆபிகாம்பண்டிதர்.

தமிழ் மொழிக்காக ஆங்கிலேயே அடக்கு முறையால் உயிர் நீத்த தாளமுத்துநாடார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தமிழர் தளபதியாக விளங்கிய சவுந்திரபாண்டியனார்.

வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து தமிழ் மீது உள்ள காதலால் 153 புத்தகங்களை எழுதியவர் இலக்கியத்திற்காக பத்மஶ்ரீ விருது பெற்ற ம.பொ.சிவஞானம் கிராமணி.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்கின்ற கொள்கையை தனது உயிர் மூச்சாக கொண்டு படிக்காத பாமரனையும் தனது தினத்தந்தி எனும் பல்கலைகழகம் மூலம் படிக்க வைத்த சி.பா.ஆதித்தனார்.

பிரசண்ட விகடன் பத்திரிக்கை ஆசிரியர்,சிறந்த தமிழ் நாவல் எழுத்தாளர் கண்ணதாசனை போல பல எழுத்தாளர்களுக்கு குருவாக திகழ்ந்து தமிழுக்கு சேவை புரிந்த நாரண.துரைகண்ணன்.

தமிழ் மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயர வேண்டும் என உரக்க குரல் கொடுத்த பன்மொழிபுலவர், பேராசிரியர்,பத்மபூசன் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்.

தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர்,பரம்பரனார்,அதங்கோட்டாசான்,ஆழ்வார்களின் தலைமை ஆழ்வாரான நம்மாழ்வார்,திருக்குறள் விளக்கவுரையை மிகச்சிறப்பாக எழுதிய பரிமேழழகர்.போன்றவர்களும் நாடார்களே.

இன்றும் தமிழ் ஜாதியினர் நடத்தும் தமிழ் அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் முதன்மையாக இருப்பவர்கள் நாடார்களே.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பல போராட்டங்களில் பங்காற்றி தியாகங்கள் பல புரிந்த விருதுநகர் பெரியார் வி.வி.ராமசாமிநாடார், வாலிப பெரியார் ஆசைதம்பி,
இப்படி பல தலைவர்கள் தாய் மொழியாம்  தமிழுக்காக பாடுபட்டார்கள்.

திருக்குறள்,கம்ப இராமாயணம்,சிலப்பதிகாரம்,வளையாபதி,குண்டலகேசி,அகநானுறு,பறநானாறு உள்ளிட்ட அனைத்து புராண இதிகாசங்களும் நமக்கு ஓலை சுவடிகள் மூலமாகவே கிடைத்தது அந்த வரலாறுகள் கிடைக்க காரணமான பனை ஓலைகள் கிடைப்பதற்கும் காரணம் நாடாண்ட நாடார்களே!

உலக தமிழர்கள் அனைவருக்கும் உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேசுநாடார்
ஆசிரியர்,நாடார் மக்கள் ஜோதி
தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம்

செவ்வாய், 16 ஜனவரி, 2018

எம்.ஜி.ஆர் 101 வது பிறந்தநாள்

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

*~இன்று முன்னாள் முதல்வர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் 101வது பிறந்த நாள்~*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*ஆதிமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் கொங்கு பகுதியை சார்ந்த அரங்கநாயகம் அவர்கள்*

*கிருஸ்துவ நாடார்களை முற்படுத்தபட்டோர் பட்டியலில் இருந்து பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்தவர்*

*பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மதிய உணவு திட்டத்தை பின்பற்றியே நான் சத்துணவு திட்டத்தை செயல்படுத்துகிறேன் என கூறி செயல்படுத்தியவர்*

*பெருந்தலைவர் காமராஜர்தான் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி என   கூறியவர்*

*சத்துணவு திட்டம் பெற்றி பெற  எம்ஜிஆர் தலைமையில்  உயர்மட்ட குழுவில் சென்னை மாநகர செரீப் டாக்டர் சிவந்திஆதித்தன்,கல்வி அமைச்சர் அரங்கநாயம் ஆகிய இருவருக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர்*

*சென்னையில் பெருந்தலைவர் வாழ்ந்த தியாகராயநகர் இல்லத்தை அரசுடமையாக்கி பெருந்தலைவர் அவர்களுக்கு முழுவுருவ வெங்கல சிலையையும் நிறுவியவர்*

*தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு தமிழ்காமராஜ் என பெயர் சூட்டி பெருந்தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தவர்*

*விருதுநகர் மாவட்டத்தை உருவாக்கி அதற்கு விருதுநகர்காமராஜர் மாவட்டம் என பெயர் சூட்டியவர்*

*சபாநாயகராக பி.எச்.பாண்டியன்,அமைச்சராக அரங்கநாயகம்,நாஞ்சில் வின்சென்ட்,எஸ்.என்.இராஜேந்திரன் ஆகிய நாடார்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்*

*மதுரை மேயராக பட்டுராஜன் அவர்களை தேர்ந்தெடுத்து நாடார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்*

*முதல்வராக இருந்த போது பல நாடார் சங்க கூட்டங்களில் கலந்துகொண்டவர்.பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை திறந்து வைத்தவர்*

*கல்வி அமைச்சராக அரங்கநாயகம் 11,12 பாடத்திட்டங்களை உருவாக்கியதற்கும் பல கலைஅறிவியல்கல்லூரிகளும்,பொறியற்கல்லூரிகளும் உருவாவதற்கு காரணமாக திகழ்ந்தவர்*

*அதிமுகவின் அவைத்தலைவராக வள்ளிமுத்து. எம்.சி.பாலன். ஆகியோர்களை நியமித்து பெருமை படுத்தியவர்*

*தமிழர் தந்தை ஆதித்தனார் சிலையை சென்னை எழும்பூரில் திறந்து வைத்தவர்*

*டாக்டர் சிவந்திஆதித்தன்,வி.ஜி.சந்தோஷம் போன்றவர்களை சென்னை மாநகர செரீப்பாக நியமித்தவர்*

*மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டியவர்*

*எம்.ஜி.ஆர் அவர்களின் தாயார் சத்யா அவர்கள் நமது சகோதர சமுதாயமான ஈழவ சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது*

*இப்படி பல வகையில் பெருந்தலைவருக்கும்,நாடார்களுக்கும்,புகழ் சேர்த்த எம்ஜிஆர் அவர்களின் 101 பிறந்தநாளில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக வாழ்த்தி  மகிழ்கிறோம்.......*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*என்றும்*
*சமுதாய பணியில்*
*~ஜெ.முத்துரமேசுநாடார்~*
*ஆசிரியர்.நாடார் மக்கள் ஜோதி*
*தலைவர்.தமிழ்நாடு நாடார் சங்கம்*

🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑

வியாழன், 4 ஜனவரி, 2018

தாது மணல் தடையால் பாதிக்கப்படுவது யார்?

தாது மணல் தொழில் முடக்கம் பாதிப்பு யாருக்கு?

தமிழகத்தில் சுமார் இருபது ஆண்டுகளாக தாது மணல் தொழில் நடைபெற்று வந்தது.

தாது மணல் தொழிலில் உலக அளவில் முதலிடத்தில் இருந்தது ஆஸ்திரேலிய நிறுவனம்.

தமிழகத்தை சார்ந்த வி.வி.மினரல் நிறுவனம் மற்றும் பல நிறுவனங்கள் தாதுமணல் தொழிலை தமிழகத்தில் செய்து வந்தார்கள்.

தாது மணல் தொழிலை நேர்மையாகவும்,தூய்மையாகவும் உழைப்பவரே உயர்ந்தவர் என கொள்கை அடிப்படையில் சிறப்பாக செயல் பட்ட வி.வி.மினரல் கம்பெனி மற்றும் அதன் தொழிலாளர்களின் கடின உழைப்பால் தமிழகத்தில் மட்டும் இல்லை,இந்திய அளவில் மட்டும் இல்லை உலக அளவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தை பிடித்து வந்தது.

தாது மணல் தொழிலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா நிறுவனமும் அதன் முதலாளிகளும் ஒரு இந்தியனிடம் அதுவும் ஒரு பச்சைதமிழனிடம் நாம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறோமே என தொழிலில் நேரடியாக மோதி வெற்றி பெற திராணி இல்லாமல்  தமிழகத்தில் வி.வி.மினரல் கம்பெனியின் தொழில் முறை போட்டியாளர்களையும்,கம்பேனிக்கு நம்பிக்கை துரோகங்களை செய்த கயவர்களிடமும் கை கோர்த்து தமிழகத்தில் தாது மணல் தொழிலை முடக்க சதி திட்டம் தீட்டி அதை வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள்.

அந்நிய நாட்டு நிறுவனத்தின் பணத்திற்காக பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் ஊடகங்களும் அதன் தரகர்களும் இதற்கு காரணம். உதாரணமாக
தமிழகத்தில் தாது மணல் தொழிலிக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்ட தி ஹிந்து ஆங்கில நாளிதழ் மற்ற மாநிலங்களில் தாது மணல் தொழிலுக்கு ஆதரவாக கட்டுரைகளை வெளியிடுவதே இதற்கு சாட்சி.

பாரம்பரியம் மிக்க ஹிந்து பத்திரிக்கையையே தங்களது ஊடக புரோக்கர்கள் மூலம் வளைத்து விட்ட அந்நிய நாட்டு கைகூலிகளுக்கு தமிழகத்தில் உள்ள மஞ்சள் பத்திரிக்கைகளை வளைப்பது என்ன பெரிய விசயமா?

தமிழகத்தில் தாது மணல் தொழில் முடக்கியதில் தற்சமயம் வெற்றி பெற்ற அந்நிய நாட்டு நிறுவனமும்,அதன் கைகூலிகளும் மீண்டும் தாது மணல் ஆலைகளை திறந்துவிட்டால் உழைப்பால் உயர்ந்த தமிழ் முதலாளியும்,அவரது தொழிலாளர்களும் மீண்டும் உலக அளவில் முதல் இடம் பெற்று விடுவார்களே என தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

எங்களை போன்ற சமுதாய உணர்வாளர்கள் எதற்காக தாது மணல் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என மத்திய,மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.

தாது மணல் தொழிலை தமிழகத்தில் செய்து வருபவர்கள் 100% பச்சை தமிழர்கள்,தாது மணல் தொழிற்சாலை ஊழியர்கள் 99.99%பச்சை தமிழர்கள் தாது மணல் முடக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தாது மணல் தொழிற்சாலை அதிபர்கள் இல்லை அவர்களுக்கு தாது மணல் தொழில் இல்லை என்றால் வேறு பல தொழில்களை உருவாக்கி கொள்வார்கள் அதற்கான ஆற்றல் அவர்களுக்கு உண்டு.

ஆனால் தாது மணல் ஆலைகளை முடக்கப்பட்டதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தாது மணல் தொழிலாளர்கள் மட்டுமே.100 தொழிலாளர்களோ,1000தொழிலாளர்களோ,10.000 தொழிலாளர்களோ இல்லை நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.00.000 மேற்பட்ட  தொழிலாளர்கள்

ஒரே நாளில் சுனாமி வந்தது போல்,புயல் வந்தது போல்,அந்நிய நாட்டு கைகூலிகளால்  தங்களது வாழ்வாதாரங்களை இழந்து நடுக்கடலில் துடுப்பு இல்லாத படகு போல்,இறக்கை இல்லாத பறவை போல்,தரையில் தவிக்கும் மீன்களை போல் தாது மணல் தொழிலாளர்களின் இன்றைய நிலைமையும்,அவர்களது குடும்பத்தார் நிலைமையும் உள்ளது.

இவர்கள் அனைவரும் நமது சகோதர தமிழ் ஜாதியினர் நமது சகோதர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் மனிதநேயமிக்க நாம் அவர்களுக்கு உதவிட வேண்டுமா?வேண்டாமா?

தர்மத்தின் வாழ்வு தன்னை தற்காலிகமாக சூது வெல்லும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்.தாது மணல் தொழிலாளர்கள் வாழ்விற்காக சட்ட போராட்டம் நடத்திவரும் வி.வி.மினரல் கம்பேனியின் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும். தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தம் பிறக்கும்.அது வரை அவர்களின் அன்றாட தேவைகளை யார் நிறைவேற்றுவார்கள்?

அரசின் தவறான நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு மாதம் 10:000 ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு  உடனடியாக வழங்கிட வேண்டும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகளை விரைவில் மத்திய,மாநில அரசுகள் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்திட வேண்டும். சட்டப்படி தாது மணல் ஆலைகளை திறந்திட துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இல்லை என்றால் எங்களது சகோதரர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட போராடுவதை தவிர வேறு வழியில்லை.தமிழகஅரசு தலைமை  செயலகம். கவர்னர் மாளிகை,மாண்புமிகு முதலமைச்சர் இல்லம்,மாண்புமிகு துணை முதல்அமைச்சர் இல்லம். போன்ற இடங்களை தொடர்ந்து முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கின்றோம்.

என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேசுநாடார்
தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம்

சனி, 11 நவம்பர், 2017

தினத்தந்தி நாளிதழ் நிறுவனரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான பா.சிவந்தி ஆதித்தன், 

இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், ஆதித்தனார்–கோவிந்தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். 1936 செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தன், சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த பின், மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

சி.பா.ஆதித்தனார், 1942ல் தினத்தந்தியைத் தொடங்கி, பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன் ஈடுபட்டார்.
##~~##
அதிபரின் மகனாக இருந்தபோதிலும், அச்சுக் கோர்ப்பவராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புகிறவராக, பிழை திருத்துபவராக, நிருபராக, துணை ஆசிரியராக (பத்திரிகையின் அனைத்து துறைகளிலும்) சிவந்தி ஆதித்தன் பயிற்சி பெற்றார். ஒரு சிறந்த பத்திரிகையாளராக பட்டை தீட்டப்பட்ட பிறகு, நிர்வாகத் துறையிலும் பயிற்சி பெற்றார்.

பா.சிவந்தி ஆதித்தனிடம் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஆதித்தனார் ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. சிவந்தி ஆதித்தனின் நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் இருந்து வெளிவருகிறது. அதிக விற்பனையுள்ள தமிழ் நாளிதழ் என்ற பெருமையை 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

திருச்செந்தூரில் ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை, பல்கலைக்கழகம் அளவுக்கு சிவந்தி ஆதித்தன் உயர்த்தினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் பெண்கள் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகவும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி யியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவன தலைவராகவும் இருந்து வந்த சிவந்தி ஆதித்தன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் செய்த சேவையை பாராட்டி இவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1994 நவம்பர் 23ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. அண்ணாமலை பல்கலைக் கழகம் 1995ஆம்ஆண்டிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2004ஆம் ஆண்டிலும், சென்னை பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டிலும் டாக்டர் பட்டம் வழங்கின. 1982ஆம் ஆண்டும், 1983ஆம் ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில், ஏராளமான கோவில் திருப்பணிகளையும் சிவந்தி ஆதித்தன் செய்துள்ளார். விளையாட்டு துறையில், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தன். அகில இந்திய கராத்தே பெடரேஷன் நிறுவன தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக 2000வது ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, சிவந்தி ஆதித்தனுக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

புதன், 19 ஏப்ரல், 2017

நாடார்கள் வரலாறு

நாடார்கள் வரலாறு
திராவிட இனத்தின் மிகப்பெரும் ஐhதியாக நாடார் சமுதாயம் விளங்கியது. ஆரியர்கள் படையெடுப்பால் திராவிடர்கள் பலவாறு பிரிய ஆரம்பித்தனர். நம் சமுதாய மக்கள் இயற்கையிலே உடல் வலிமை, கடும் உழைப்பிற்கு சொந்தக்காரர்களாக இருந்தனர். அதாவது உண்மையான சத்திரியகுலம் நாடார் குலம் தான்.
பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் நாடார் குலத்தவர்கள் என்று வரலாறு கூறுகின்றது. அதற்கு சரியான ஆதாரமும், வலுவான கருத்துக்களும் நம்மிடம் உள்ளது.
நாயக்க மன்னர்கள் படையெடுப்பால் நம் அரச குலம் சொல்லொன்னா துயரம் அடைந்தது. நம் சமுதாயம் சிதறி பெரும்பகுதி மக்கள் இலங்கைக்கு சென்றனர். இந்தியாவில் இருந்தவர்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கமுடியாத தேரிப்பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் வசிக்கதொடங்கினர்.
நாடாண்டகுலம் நாடு பிடுங்கப்பட்டு காடு விரட்டப்பட்டு கடுந்துன்பம் அடைந்தது. நம் வரலாறுகள் பெரும்பகுதி அழிக்கப்பட்டன. இலங்கை மற்றும் நம் ஆட்சிக்கு அப்பார்பட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாகவே நாம் நம் பெருமைகளை அறிய முடிந்தது.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பாண்டிய, சேர, சேழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டுவந்தனர்.
இந்த மூவருமே சகோதரர்கள் எனவும் பாண்டியன் மூத்தவன் எனவும் வரலாறு கூறுகின்றது. ஆரம்ப காலத்தில் கொற்கை தலைநகராக இருந்தது. பின் அது பாண்டிய நாட்டின் தலைநகராக மாறியது.
பாண்டியனின் துறைமுகமும் கொற்கைதான்.
1292 ல் மதுரை பாண்டியனின் தலைநகர் ஆனது. பழையகாயல் பாண்டியனின் துறைமுகம் ஆனது. கொற்கை பொலிவு இழந்தது. இந்த கொற்கை இன்று கடலில் இருந்து பலகிலோமீட்டர் தொலைவில் பனைமரக்காடாய் அமைந்துள்ளது.
14ம் நூற்றாண்டில் முகமதியர் பாண்டியமன்னனை வென்றனர். அதன் பின் மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் பாண்டிய அரசு தோற்றது. சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் அழிக்கப்பட்டன. அரசகுலம் நாடுவிரட்டப்பட்டனர்.
இலங்கை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில் நாடார் சமுதாயம் காணப்படுகின்றது.